வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி எப்போது அமைக்கப்படும்? பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 September 2024

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி எப்போது அமைக்கப்படும்? பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி.

 


வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி எப்போது அமைக்கப்படும்? பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி.


மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ச. சிதம்பரம் அவர்கள் தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் அவர்களுக்கு வேலு நாச்சியார் அவர்களின் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி அமைப்பது தொடர்பாக கடிதம் எழுதுகிறார்.


அக்கடிதத்தில் கார்த்தி சிதம்பரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது, "மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடந்த 08.06.2022 அன்று சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்தபோது இந்தியாவின் முதல் சுதந்திரபோராட்ட வீராங்களை வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களது சிறப்பினை போற்றும் வகையில் சிவகங்கை நகரை தலைமையிடமாக கொண்டு வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். முதல்வரும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக விழா மேடையிலேயே கூறியிருந்தார்கள்.


03.11.2022 அன்று உள்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்/தலைமை காவல்படை சென்னை அவர்களுக்கு கடிதம் மூலம் கருத்துருவினை கேட்டார்கள். அதன்பின் 03.02.2024, 03.04.2023 ஆகிய தேதிகளில் முதல்வர் அவர்களுக்கும், 28.08.2023 அன்று தங்களுக்கும் நினைவூட்டல் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் இந்நாள்வரை இக்கல்லூரி துவங்குவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.


எனவே எனது கோரிக்கையின் மீது சிறப்பு கவனம் செலுத்தி விரைவில் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களது பெயரில் சிவகங்கையை தலைமையிடமாக கொண்டு பெண் காவலர்கள் சிறப்பு பயிற்சி கல்லூரி துவங்கி வீரமங்கைக்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் தனது கடிதத்தின் மூலமாக தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் அவர்களை நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad