சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தாவரவியல் துறை சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் துரை தலைமை வகித்து சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்துப் பேசினார். கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கோமளவல்லி கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கிக் கூறினார். உதவிப் பேராசிரியர் கோபிநாத் வரவேற்புரை ஆற்ற, முனைவர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். கருத்தரங்கில் கேரளாவின் தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியத்தின் மூத்த ஆலோசகரும், 30க்கும் மேற்பட்ட புதிய தாவரங்களைக் கண்டுபிடித்தவருமான முனைவர் உதயன், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பல்லுயிர்களின் எதிர்காலம் குறித்தும், மனித ஆரோக்கியத்தில் மருத்துவத் தாவரங்களின் பங்கு குறித்தும் பேசியதோடு, எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சி மருத்துவத் தாவரங்களைச் சார்ந்தே இருக்கும் என்றும் சிறப்புரையாற்றினார். சமூகச் செயற்பாட்டாளர் அரிமா ஆனந்த் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். உதவிப் பேராசிரியர் பழனிச்சாமி நன்றி கூறினார். கருத்தரங்கில் கௌரவ விரிவுரையாளர்கள் கோட்டைச்சாமி , தேவி, உமா மகேஸ்வரி மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். கௌரவ விரிவுரையாளர் முனைவர் வேல்முருகன் மற்றும் முதலாம் ஆண்டு முதுகலை மாணவி ஹாஜிரா சுமையா பேகம் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
மாவட்டச் செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment