விஜயதசமியை முன்னிட்டு மானாமதுரையில் உள்ள பாபா மெட்ரிக் பள்ளியில் மாறுவேட போட்டி அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்ற உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியின் அரிச்சுவடியில் 'அ' னா 'ஆ' வன்னா அக்டோபர் 11 ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு மேட்டுத் தெருவில் அமைந்துள்ள பாபா மெட்ரிக் பள்ளியில் மாபெரும் மாறுவேடப் போட்டி பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் 2 1/2 வயது முதல் 3 1/2 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொள்ளலாம்.
முதல் பரிசு 2000, இரண்டாம் பரிசு 1500, மூன்றாம் பரிசு 1000 மற்றும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிச்சய பரிசு உண்டு. மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளும் குழந்தைகள் சரஸ்வதி வேடம் அணிந்து வரவேண்டும். கொடுக்கப்பட்டுள்ள 'கியூ ஆர்' பயன்படுத்தி 9.10.24 தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment