இளையான்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட சீத்தூரணி, திருவுடையார்புரம் கிராமங்களை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் பணியில் ஈடுபடும்போது விஷவாயு தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு நபர்களின் குடும்பத்தை சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் வழங்கப்படும் பணியிட விபத்து மற்றும் மரண நிவாரண தொகையான ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையினை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆசா அஜித் இ.ஆ.ப மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசு ரவிக்குமார் ஆகியோர் வழங்கினார். மேலும் பிரேத பரிசோதனை முடிவடைந்து உடல்களை வாங்க மறுத்த குடும்பத்தினர், நிவாரண தொகை மற்றும் அரசு வேலை வழங்கிட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment