கீ மென் செந்தில்குமார் அவர்களின் முயற்சியால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது... - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 September 2024

கீ மென் செந்தில்குமார் அவர்களின் முயற்சியால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது...


கீ மென் செந்தில்குமார் அவர்களின் முயற்சியால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது... 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சூடியூர் ரயில் நிலையத்தில் இருந்து  பரமக்குடி வழியாக ராமேஸ்வரம் வரை  செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் ரயில்வே ஊழியர் கீ மேன்  செந்தில்குமார் சூடியூர் ரயில் நிலையத்திலிருந்து  நடந்து ரயில்வே தண்டவாளங்கள் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்து   கொண்டு நடந்து சென்றுள்ளார்,


அப்போது கமுதகுடி அருகே உள்ள தெளிச்சாத்து நல்லூர் கண்மாய்க்குள்  செல்லும் ரயில்வே தண்டவாளத்தின் ஒரு புறத்தில் மட்டும்  சுமார்120 மீட்டருக்கு   தண்டவாளம் நகராமல் இருக்க  பிடிமானத்திற்காக பொருத்தப்பட்ட 420 க்கும் மேற்படட க்ளிப்புகள் அனைத்தும் கலன்று  கிடைத்துள்ளதாகவும் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் எதிர்ப்புறம் மதுரை டு ராமேஸ்வரம் பயணிகள் வந்துள்ளது உடனடியாக ஓடிச் சென்று சிவப்பு கொடி காட்டி அந்த ரயிலில் வந்த பயணிகளின் உயிரையும் காப்பாற்றி உள்ளார்,  இதனைத் தொடர்ந்து இதனை ரயில்வே ட சென்ற கீ மேன் செந்தில்குமார் உடனடியாக தகவல் அளித்துள்ளார்,

அதனை  உடனே   விரைந்து வந்து ரயில்வே ஊழியர்கள் அதை சரி செய்துள்ளனர், 


இது ரயிலை கவிழ்க்க  செய்த சதி வேலையா? இல்லை வேறு யாரேனும் ஈடுபட்டு உள்ளார்களா என்று பல்வேறு கோணங்களில்  போலீசார் விசாரித்து வருகின்றனர் ,


தகவல் அளித்த கீ மென்  செந்தில்குமாரே தமிழ் நாடு ரயில்வே காவல்துறையினர் இரவு  அழைத்துச் சென்று ரகசியமாக  விசாரித்து வந்துள்ளனர்,  அழைத்துச் சென்றவர் இரவு  11 மணி வரை எங்கிருக்கிறார் என்று யாருக்கும் கூறவில்லை ,இரவு வரை எங்கு இருக்கிறார் என்று ரயில்வே தொழிலாளர்கள் கேட்டுள்ளனர், ,அதற்கு போலீசார் எந்த பதிலும் கூறாததால் மானாமதுரை ரயில்வே சந்திப்பில் இரவு 11 மணிக்கு மேல் ரயில்வே காவல் நிலைய முன்பாக SRMU    தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ரயில்வே ஊழியர்கள்   போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் விசாரணையில் ஊழியர் செந்தில்குமார் இருப்பது போராட்டக்காரர்களிடம்   தெரிவிக்கப்பட்டது, விசாரணை முடிந்ததும் வெளியில் அனுப்பி விடுவதாக கூறவே  ஊழியர்களும் போராட்டத்தை கைவிட்டனர்


 ஆனால் ரயில்வே ஊழியர் செந்தில்குமாரை காலை முதல் வரவில்லை  மானாமதுரை ரயில் நிலையம் முன்பாக மறுபடியும்  காலையில் ரயில்வே ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள் 


இந்நிலையில் கி மேன் செந்தில்குமாரை தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் பயங்கரமாக விசாரணை செய்ததில் அவர் அந்த குற்றத்தை செய்யவில்லை என்று தெரியவந்தது இதனை தொடர்ந்து அவரிடம் எதிர்காலத்தில் இது குறித்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி கடிதத்தை எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர், மேலும்  


இது குறித்து பேசுகையில் நான் நேற்று பணிக்கு சென்ற போது தண்டவாளத்தில் இருந்த கிளிப்புகள் அனைத்தும் கழன்று கிடந்தது,  அப்போது எதிரே வந்த மதுரை டு ராமேஸ்வரம் பேசஞ்சர் ரயிலை சிவப்பு கொடி காட்டி நிறுத்தி வைத்தேன் மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டது 


இதனைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க விரைந்து வந்து அந்த பாதையை ஒரு இரண்டு மணி நேரத்திற்குள் சரி செய்தனர் ,இதனை தொடர்ந்து விசாரணைக்கு  ரயில்வே காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்


 விசாரணைக்கு அழைத்து சென்றார்கள் இந்நிலையில் நான் தவறு செய்யவில்லை என்று தெரிந்து என்னிடம் இடம் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு என்னை அனுப்பி வைத்தார்கள்


ரயில்வே காவல் துறை வட்டாரங்களில் கூறுகையில்   இந்த தண்டவாளத்தின் கிளிப்புகளை யாரும் எளிதாக கழட்டி விட முடியாது, இதை கழட்ட வேண்டுமென்றால் அதற்கு தனியாக ஆயுதங்கள் தேவைப்படும் இதைப்பற்றி நன்கு தெரிந்தவர் மட்டுமே கழட்டிருக்க முடியும் என்று அதன் அடிப்படையில் தான் செந்தில்குமாரை வைத்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது , இந்த நாச வேளையில் யார் ஈடுபட்டிருப்பார் என்பதை கண்டுபிடிக்க திருச்சியில் ரயில்வே எஸ் பி ராஜன்  செந்தில்குமாரையும் இந்த நாச வேலையில் ஈடுபட்ட யார் யார் என்றும் தீவிரமாக விசாரணை நடத்தினர்  இந்த சம்பவம் ரயில்வே  துறையே அதிர்ச்சிக்குள் உள்ளாக்கி உள்ளது மேலும் இது  குறித்து விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் ரயில்வே பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வர இருப்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இந்த நாச வேலை செய்துள்ளது போலீசார் இடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad