வன்முறையை தூண்டும் ப்ளக்ஸ் பேனர், மூவர் கைது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தட்டான்குளத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் மகன் முத்துகுமார்(19) மதுரை அல்ட்ரா கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் இவர் தனது உறவினர் திருமணத்திற்காக “ தலைமை ஆணையிட்டால் தலைகள் சிதைக்கப்படும்” என வாசகத்தை அச்சிட்டு ப்ளக்ஸ் பேனர் திருப்புவனத்தில் வைத்துள்ளார். வன்முறையை தூண்டும் வண்ணம் ப்ளக்ஸ் பேனர் வைத்ததாக திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து முத்துகுமாரை கைது செய்தனர். ப்ளக்ஸ் பேனர் டிசைன் செய்த ஸ்டூடியோ உரிமையாளர் இளஞ்செழியன் (26), ப்ளக்ஸ் பேனர் அச்சிட்ட மதுரையைச் சேர்ந்த சத்ரு (46) ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து தலைவர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் வன்முறையை தூண்டும் வாசகங்களை அச்சிட கூடாது என ஸ்டூடியோ உரிமையாளர்கள், ஊழியர்கள் அனைவரையும் அழைத்து எச்சரிக்கை விடுத்தும் அச்சிட்டதால் போலீசார் நடவடிக்கை. இதே போல மானாமதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு “ வெறுக்கும் கூட்டம் வேடிக்கை பார்க்கட்டும்” என அச்சிட்டு ப்ளக்ஸ் வைத்த மானாமதுரை ரவிசங்கர், வடிவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
No comments:
Post a Comment