மானாமரையில் தியாகி இம்மானுவேல் சேகரனார் குருபூஜையை முன்னிட்டு உதயநிதி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த திமுக கட்சியினர்.
ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரையில் இன்று நடைபெறும் தியாகி இமானுவேல் சேகரனார் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையிலும், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் மற்றும் திமுக நகர் கழக செயலாளர் க. பொன்னுசாமி ஆகியோரின் முன்னிலையிலும் மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை ராஜாமணி, மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்ட ஒன்றிய நகர பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
No comments:
Post a Comment