சூரக்குளத்தை சேர்ந்த 18 வயது நிரம்பப் பெறாத சிறுவன் ஓடிச் சென்ற இருசக்கரம் வாகனம் விபத்துக்குள்ளானதில் பெற்றோர் மீது வழக்குப்பதிவு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 September 2024

சூரக்குளத்தை சேர்ந்த 18 வயது நிரம்பப் பெறாத சிறுவன் ஓடிச் சென்ற இருசக்கரம் வாகனம் விபத்துக்குள்ளானதில் பெற்றோர் மீது வழக்குப்பதிவு.

 


சூரக்குளத்தை சேர்ந்த 18 வயது நிரம்பப் பெறாத சிறுவன் ஓடிச் சென்ற இருசக்கரம் வாகனம் விபத்துக்குள்ளானதில் பெற்றோர் மீது வழக்குப்பதிவு. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் சூரக்குளத்தை சேர்ந்தவர் செல்வம் ன. இவரது மகன் கார்த்தி (15) கொன்னக்குளத்தில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். கார்த்தி தனது தாயார் அழகுராணியின் (42) உடல் நலக்குறைவு காரணமாக மருந்து வாங்குவதற்கு தனது தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அதிவேகமாக கொன்னக்குளம் - சாத்திரசன்கோட்டை செல்லும் வழியில் நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 


இதனையடுத்து அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் வாகனத்தை இயக்கிய 18 வயது நிரம்ப பெறாத சிறுவன் கார்த்தி மீது அழகுராஜா (42) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுவன் மற்றும் சிறுவனின் தாயார் மீது மானாமதுரை சிப்காட் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad