காரைக்குடி ஜேஎம் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில்,சாமியார் தோட்டம் எதிரில் அமைந்துள்ள ஜே.எம் மெடிக்கல் சென்டரில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. சுகர் கம்ப்ளைன்ட், இரத்த அழுத்தம், இ சி ஜி பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகளும் இலவசமாகவே வழங்கப்பட்டன. அதிக அளவிலான பயனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை ஜே.எம் மருத்துவமனை இயக்குனர் மேக்ஸ் , மருத்துவ நிபுணர் டாக்டர்.முத்துக்குமார், மற்றும் எலும்பு சிகிச்சை மருத்துவர் நிபுணர் டாக்டர்.நாகேந்திரன், மற்றும் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள், செய்திருந்தது.
No comments:
Post a Comment