தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சிவகங்கை மாவட்டம் சார்பாக தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்காக, தொடர்ந்து போராடி வரும் சாம்சங் நிறுவத்தின் தொழிலாளர்களுக்கான தங்களின் ஆதரவை தெரிவிக்கும் விதமாக சிவகங்கை மாவட்ட கருவூலக அலுவலகம் முன்பாக மாவட்ட மகளிர் அமைப்பாளர் லதா அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு விடுதி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் முனிஸ்வரன் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் சங்கம் மாவட்டத் தலைவர் நவநீதக் கிருஷ்ணன் ஆகியோர் போராட்ட உரையும், மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் நிறைவு உறையும், மாவட்ட பொருளாளர் மாரி நன்றி உரையாற்றினர்.
மேலும் இந்நிகழ்வில்மாவட்ட துணைத்தலைவர்கள் பாண்டி, கார்த்திக், மாவட்ட இணைச் செயலாளர் பயாஸ் அகமது, தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் மாநில செயலாளர் பாண்டி, சாலை பணியாளர் சங்கம் மாவட்ட பொருளாளர் சதுரகிரி, தமிழ்நாடு அரசு ஊழியர சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment