மானாமதுரையில் தியாகி இமானுவேல் சேகர் அண்ணா குருபூஜையை முன்னிட்டு தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த காங்கிரஸ் கட்சியினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறும் தியாகி இமானுவேல் சேகரனார் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி அவர்களின் தலைமையிலும், நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு புருஷோத்தமன் அவர்களின் முன்னிலையிலும் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு செல்வபெருந்தகை மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்வில் மாநில மகளிர் அணி துணை தலைவி ஸ்ரீவித்யா கணபதி, மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜீவ் கண்ணா, வட்டாரத் தலைவர்கள், நகரத் தலைவர்கள், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வட்டார நகர பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment