சிவகங்கையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
சிவகங்கையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பாக மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடத்தப்பட்ட சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழாவில் நடைபெற்றது.
இதில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித், மாவட்ட கழக துணை செயலாளர் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் த. சேங்கைமாறன், திட்ட இயக்குனர் திருமதி என். கவிதப்பிரியா, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் காந்தி, சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி. எம். துறை ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் வங்கி மேளாளர் பிரவீன் குமார், மேலாண்மை இயக்குனர் மத்திய கூட்டுறவு வங்கி உமா மகேஸ்வரி, இணைய பதிவாளர் ராஜேந்திர பிரசாத், ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன் மற்றும் முத்துராமலிங்கம், மாவட்ட விவசாய அணி டி.ஆர். சேகர், மாவட்ட ஆதிதிராவிடர் குழு அமைப்பாளர் சிங்கமுத்து, மாவட்ட கவுன்சிலர் சகாயராணி, நகர் மன்ற உறுப்பினர் அயூப் கான், மகளிர் அணி துணைத் தலைவர் மார்க்கெட் கமலா, மாணவரணி ராஜ்குமார், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களும், அரசு துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகளும் மற்றும் பத்திரிகை நண்பர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment