சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிரமிட் ஐ ஏ எஸ் அகடமி மூலமாக அரசு பள்ளியில் பயின்ற ஒர்ஆண்டு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மூலம் மருத்துவராகும் கனவு நிறைவேற்றி உள்ள 6 அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரி நகரில் அமைந்துள்ள பிரமிட் ஐஏஎஸ் அகாடமி மூலமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான ஓராண்டு நீட் தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டிற்கான MBBS மற்றும் BDS படிப்பிற்கான கலந்தாய்வு22.08.2024 அன்று நடைபெற்றது.
இந்த பயிற்சியில் பங்கு பெற்ற மாணவர்களில் ஐந்து மாணவர்கள் MBBS படிப்பும் ஒருவருக்கு BDS படிப்பும் கிடைத்துள்ளது. இதில்சிவகங்கை மாவட்டம் பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிப்பை முடித்த சாக்கோட்டை அருகே உள்ள கமலை கிராமத்தை சேர்ந்த கூலி வேலை செய்யும் உடையப்பன் அவர்களின் மகன் ரவி என்பவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம் பி பி எஸ் சீட் கிடைத்துள்ளது மேலும் பீர்க்கலை காடு பள்ளியில் பயின்ற அதே கமலை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது மேலும் காரைக்குடியை சேர்ந்த காயத்ரி என்பவருக்கு கோயமுத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம் பி பி எஸ் சீட்ஆவுடையார் கோயிலை சேர்ந்த சிவராஜா என்பவருக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம் பி பி எஸ் சீட்கிடைத்துள்ளது மேலும் ஆவுடையார் கோவிலை சேர்ந்த ஹரி நந்தா என்பவருக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சிங்கம் புணரியை அடுத்த திருக்கனாப்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவருக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் பிடிஎஸ் சீட் கிடைத்துள்ளது
தமிழ்நாடு அரசின் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில்மருத்துவக்கல்வி பயிலவாய்ப்பு பெற்றுள்ள இவர்கள் முழு கல்விச் செலவையும் அரசே செலவிடும் குறிப்பிடத்தக்கது இந்த ஆறு மாணவர்களுக்கும் மற்றும் அவர்களின் வெற்றிக்கு பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா பிரமிடு ஐஏஎஸ் அகாடமியில் நடைபெற்றது இவ்விழாவில் தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முன்னாள் மண்டல துணை இயக்குனர் டாக்டர் P சுரேஷ்குமார் B.L.MBA Ph.D அவர்களும் சிவகங்கை மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் T முத்துராமலிங்கம் MSC.B.ED.mphil அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினர் இதற்கான ஏற்பாடுகளை பிரமிடு ஐஏஎஸ் அகாடமி பயிற்சி குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் இவ்விழாவில் பிரமிட் ஐஏஎஸ்அகடமி இயக்குனர் சி எஸ் கற்பகம் M TEC. மாணவர்கள் அனைவரையும் பாராட்டு மகிழ்ந்தார்
No comments:
Post a Comment