சிவகங்கையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 12-வது பொன்விழா கலை இலக்கிய இரவு நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சிவகங்கை கிளை சார்பாக 12-வது பொன்விழாவை முன்னிட்டு கலை இலக்கிய இரவு 2024, சிவகங்கை மலைராம் குழுமம் மற்றும் சேது பாஸ்கரா கல்விக் குழுமம் இணைந்து வழங்கிட சிவகங்கை அரண்மனை வாசலில் சனிக்கிழமை இரவு வரவேற்பு குழு தலைவர் பொறியாளர் திரு இரா. பாண்டிவேல் அவர்களின் தலைமையிலும், மாவட்ட செயலாளர் திரு அன்பரசன் அவர்கள் விழாவை தொடங்கி வைக்க, மாநில குழு ஜீவசந்தன், மாவட்டத் தலைவர் தங்கமுனியாண்டி, மாவட்ட பொருளாளர் பாலமுருகன் மற்றும் கிளைத் தலைவர் சிவனேஷ் பூசைத்துரை ஆகியோரின் முன்னிலையிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் மதிப்பெண் செய்பவர்களாக சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குனர் முனைவர் திரு ஆ. ரா. சிவராமன், முதன்மை கல்வி அலுவலர் திரு அ. பாலு முத்து மற்றும் எழுத்தாளர், தலைவர் சேது பாஸ்கரா குழுமம் முனைவர் திரு சேது குமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கவிஞர்கள், கலைக்குழுவினர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக பாடல், கவிதை, கதை, நையாண்டி, நாட்டு நடப்பு, இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள், கிளை செயற்குழு உறுப்பினர்கள், விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக சிவகங்கையில் உள்ள ராமச்சந்திரனார் பூங்காவிலிருந்து மாலை 6 மணியளவில் தொடங்கப்பெற்ற 'மக்கள் ஒற்றுமை கலை பேரணியை' சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவப் பேராசிரியர் திரு அ. தங்கதுரை அவர்கள் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment