திருப்பாச்சேத்தி அருகே இளைஞரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 September 2024

திருப்பாச்சேத்தி அருகே இளைஞரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது.


திருப்பாச்சேத்தி அருகே இளைஞரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது. 


சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த அழகு சுந்தரம் மகன் பழனிமுருகன் (30), அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். பழனிமுருகன் பிச்சைபிள்ளையேந்தல் கிராமம் அருகே மர்ம நபர்களால் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 


உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஆவரங்காடு பகுதியை சேர்ந்த மகாராஜன், வீரசிங்கன், அழகு பாண்டி, ரமேஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad