கிரிக்கெட் மற்றும் கபடி போட்டிகளை துவக்கி வைத்த பாராளுமன்ற உறுப்பினர், இளைஞர்கள் உற்சாகம் வரவேற்பு.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் மருங்கிபட்டி கிராமத்தில் இளைஞர்களால் நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் அவர்கள் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தேவகோட்டை தீன் இலாஹி அணியினரால் நடத்தப்படும் மாபெரும் கபடி போட்டியையும் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் துவக்கி வைத்தார்.
இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், விழா குழுவினர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment