காரைக்குடி குளோபல் மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் இல்லம் தேடி மருத்துவத் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குளோபல் மெஷின் மருத்துவமனை இரண்டாம் ஆண்டு துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது, இந்த விழாவில் குளோபல் மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் குமரேசன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று உயிர் என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் மனித உடல் இயக்கத்தை கண்டறியும் செயலிக்கான ஆராய்ச்சி துவக்கம் பற்றி விளக்கினார்.,
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் அவர்கள் சிறப்புரை ஆற்றி மருத்துவமனையையும் மருத்துவமனையின் நிர்வாக குழுவினரையும் வாழ்த்தி புகழாரம் சூட்டினார்., பின்பு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் அவசர உதவிகளுக்கு அழைத்தால் இருசக்கர வாகனத்தில் இல்லத்திற்கே வந்து மருத்துவ உதவி செய்யும் திட்டத்தையும் அட்வான்ஸ் ஸ்பெஷல் டயாபட்டிக் ஸ்கேன் சென்டரையும் திறந்து வைத்தார் மேலும் ஏழை எளிய மக்களுக்கான இலவச மற்றும் சலுகை கட்டணத்தில் மருத்துவம் பார்க்க அடையாள அட்டைகளை வழங்கினார், நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வான மதுரை மாதவன் ஹாட் சென்டருடன் ஒப்பந்தம், முன்னாள் அமைச்சர் தென்னவன் மருத்துவமனையின் டைம்ஸ் ஹெல்த் கேர் ஃபவுண்டேஷன் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் செய்த சமூக சேவைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்., காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடி மாநகராட்சி தலைவர் முத்துதுரை, குளோபல் மிஷின் மருத்துவமனை துணை இயக்குனர் விவேகானந்தன், நகரின் முக்கிய பிரமுகர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment