சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைஞர் தமிழ் சங்கத்தின் சார்பாக பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா எழுதிய சொல்லின் செல்வர் கலைஞர் என்னும் நூல் வெளியீட்டு விழா.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் பேராசிரியர் முனைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார். காரைக்குடி கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான தென்னவன் தலைமை வகித்து கலைஞரின் பேச்சாற்றலின் சிறப்பை எடுத்துக் கூறினார். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு கே ஆர் பெரிய கருப்பன் நூலை வெளியிட்டு கலைஞரின் பேச்சுக் கலையை இன்றைய இளைய சமுதாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தன் வாழ்த்துரையில் குறிப்பிட்டார். நூலைப் பெற்றுக் கொண்ட தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு என்பது புரட்சியை நிகழ்த்துவதாக இருக்க வேண்டும் என்று கூறி அத்தகையதொரு புரட்சியை கலைஞரின் பேச்சுக்கள் உருவாக்கின என்றும் கலைஞர் கேட்டுக் கொண்டதற்கிணங்க குன்றக்குடி ஆதீனம் ஆற்றிய சமூகப் பணிகளை எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தன் வாழ்த்துரையில் கலைஞரின் பேச்சாற்றல் அனைவரும் வியந்து போற்றத்தக்கது எனக் கூறினார்.
காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை வாழ்த்துரை வழங்கினார் நகர்மன்ற துணைத் தலைவர் குணசேகரன், திருப்புவனம் பேரூராட்சி மன்றத் தலைவர் சேங்கை மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏற்புரை நிகழ்த்திய நூலாசிரியரும், அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவி பேராசிரியருமான முனைவர் வேலாயுத ராஜா குன்றக்குடி ஆதீனத்திற்கும் கலைஞருக்கும் உள்ள தொடர்பு குறித்தும், கலைஞரின் சொல்வன்மையின் சிறப்புகளையும் எடுத்துக் கூறினார். காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவி அஞ்சுகா இந்திய குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றதைப் பாராட்டி கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அவருக்கும், காரைக்குடியின் இளம் பேச்சாளர்கள் ராகவேந்தர் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோருக்கும் கலைஞர் தமிழ்ச்சங்க விருதுகளை மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் வழங்கினார். கலைஞர் தமிழ்ச் சங்க செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் ஷெரின் பர்கானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment