மதுரையில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் பரிசுகளை வென்ற சிவகங்கையை சேர்ந்த கலாம் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 August 2024

மதுரையில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் பரிசுகளை வென்ற சிவகங்கையை சேர்ந்த கலாம் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள்.

 


மதுரையில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் பரிசுகளை வென்ற சிவகங்கையை சேர்ந்த கலாம் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள்.


இன்டெர் ஸ்டேட் ஓப்பன் ஆர்ச்செரி சாம்பியன்ஷிப் 2024-க்கான கள-வில்வித்தை போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மதுரையில் நடந்து முடிந்து. இப்போட்டியில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 'கலாம் ஸ்போர்ட்ஸ் அக்காடமியில்' பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் அவர்களுக்கான வயது வரம்பின் அடிப்படையில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். 


குறிப்பாக மாணவன் எஸ். அபிஷேக் குமார் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையே கலந்து கொண்டு வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றார். அடுத்ததாக மாணவி கே. அபர்ணா 12 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கிடையே கலந்து கொண்டு முதல் பரிசு வென்றார். தொடர்ச்சியாக மாணவி எஸ். வைஷ்ணவி 12 வயதக்குட்பட்ட மாணவிகளுக்கிடையே கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்றார். இவர்கள் மூன்று பேரும் Bore Bow போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். 


மேலும் எஸ். முகமது ரிஃபா 14 வயதுக்குட்பட்ட Indian Bow வரிசையில் கலந்து கொண்டு சிலகங்கை மாவட்ட கலாம் ஸ்போர்ட்ஸ் அக்காடமிக்கு பெறுமை சேர்த்துள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பயற்சி அளித்த பயிற்சியாளர் மானாமதுரையைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் எஸ். அய்யப்பன் அவர்களுக்கு தங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad