போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி மானாமதுரையில் இளைஞரிடம் பணம் கையாடல். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 August 2024

போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி மானாமதுரையில் இளைஞரிடம் பணம் கையாடல்.


 போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி மானாமதுரையில் இளைஞரிடம் பணம் கையாடல்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த இளைஞருக்கு போலீஸில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 28 ஆயிரம் பெற்று போலி பணிநியமன ஆணை வழங்கிய போலி போலீஸ்காரர் சிக்கினார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா உழுத்திமடை கிராமத்தைச் சேர்ந்த நாகமலை மகன் நாகஅர்ச்சுனன் (24). இவர் மானாமதுரை சிப்காட் ராஜேந்திரன் நகரில் வசித்து வருகிறார். இவர் மதுரை சரவணா ஸ்டோர்ஸில் வேலை செய்யும் போது ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அன்னைநகர் சாலமோன் ராஜா மகன் சேத்ரோவுடன் (25) நட்பு ஏற்பட்டுள்ளது. 


திருச்சியில் போலீசாக வேலை செய்வதாகவும் நாகஅர்ச்சுனனுக்கு போலீஸ் கேன்டீனில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூபாய் 28 ஆயிரத்தை சேத்ரோ பெற்றார். இதற்காக போலி பணி நியமன ஆணை ஒன்றையும் கொடுத்துள்ளார். அதை சந்தேகித்த நாகஅர்ச்சுனன் அவரை மீண்டும் தொடர்பு கொண்டபோது, "இது முதல் ஆணை என்றும், மற்றொரு பணி நியமன ஆணை வரும்", என சேத்ரோ கூறியுள்ளார். சேத்ரோ மேலும் ரூபாய் 3 ஆயிரம் வேண்டும் என தொலைபேசியில் கேட்டுள்ளார். 


பணத்தை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு நாகஅர்ச்சுனன் குடும்பத்தினர் அவரிடம் தெரிவித்துள்ளனர். நாகஅர்ச்சுனன் வீட்டுக்கு வந்து சேத்ரோவை வெளியில் விடாமல் பூட்டி விட்டு சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேத்ரோ பாம்பனில் விபத்து மற்றும் வழக்கு விசாரணைகளில் சிக்கிய இருசக்கர வாகனங்களை வாங்கித்தருவதாக ஏமாற்றிய வழக்கில் ஏற்கனவே கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad