தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 August 2024

தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.


தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் தாயமங்கலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா குரோதி வருடம் ஆவணி 6 ஆம் தேதி காலை சுமார் 9 மணியளவில் வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றது. இதில் முத்துமாரியம்மனுக்கு பட்டு உடுத்தி, மாலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். 


இவ்விழாவில் தாயமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இளையான்குடி, பரமக்குடி, ஆர். எஸ். மங்கலம், மறவமங்கலம் மானாமதுரை ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தகோடி பெருமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad