சிறுபாலை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வாளவந்தாள் அம்மன் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 August 2024

சிறுபாலை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வாளவந்தாள் அம்மன் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது


சிறுபாலை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வாளவந்தாள் அம்மன் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சிறுபாலை கிராமத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ வாளவந்தாள் அம்மன் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு முளைப்பாரி திருவிழா கடந்த ஆறாம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் முத்து பரப்புதல் ஆகியவற்றோடு தொடங்கப் பெற்று திருவிழாவானது வெகு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த 13 ஆம் தேதி கரகம் எடுத்தல் மற்றும் வீதி உலாவோடு வள்ளி திருமணம் நாடகம் அரங்கேறியது. 


மேலும் 14 ஆம் தேதி அன்று பாரி எடுத்து செல்லும் விழா சிறுபாலை கிராம பொதுமக்களால் அனுசரிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தலையில் பாரி சுமந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்நிகழ்வில் கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad