கட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி ஏற்ற மாணவ மாணவிகள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 August 2024

கட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி ஏற்ற மாணவ மாணவிகள்.

 


கட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி ஏற்ற மாணவ மாணவிகள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற 'போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு' நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் போதைப் பொருள்கள் குறித்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து மானாமதுரை சட்டமன்ற தொகுதி மானாமதுரை ஒன்றியம் கட்டிக்குளம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்களின் தலைமையில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வை மாணவ மாணவிகளுக்கு எடுத்து கூறியும், போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்து போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஒன்றிய குழு பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், கட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ் நேசன், அரசுத்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad