மேலச்சொரிக்குளம் கிராமத்தில் 'மக்கள் தொடர்பு முகாம்' நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் மேலச்சொரிக்குளம் கிராமத்தில் 'மக்கள் தொடர்பு முகாம்' நிகழ்ச்சி மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப ஆகியோர் முன்னிலை நடைபெற்றது. இம்முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், திட்ட இயக்குனர் சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர் ஈஸ்வரன், மேலச்சொரிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கங்குளம் ஈஸ்வரன், லாடனேந்தல் சுப்பையா, பழையனூர் சுப்பிரமணியன், விவசாய அணி டி. ஆர். சேகர், இளைஞர் அணி தேவதாஸ், அவைத்தலைவர் இளங்கோவன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment