மானாமதுரையில் அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகளுக்கான தேர்வு முகாமை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதியான செய்களத்தூர் அருகில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கட்டப்படவிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கான பயனாளிகளின் தேர்வு முகாமை முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் தொடங்கி வைத்தார். இம்முகாமை முன்னிட்டு புதிய குடியிருப்புக்கான பயனாளிகளின் விபரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நகர மன்ற துணைத் தலைவர் பாலசுந்தர், ஒன்றிய கழக செயலாளர்கள் துரை ராஜாமணி, அண்ணாதுரை, நகர் மன்ற உறுப்பினர்கள் இந்துமதி திருமுருகன், காளீஸ்வரி, சண்முகப்பிரியா, மன்னர் மன்னன், ராஜேந்திரன், சதீஷ், செல்வகுமார், சோமசுந்தரம், கிளைச் செயலாளர் மருது, சடையப்பன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment