திருப்புவனம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேறிய முக்கிய தீர்மானம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் த. சேங்கைமாறன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையின் முடிவில் திருப்புவனத்திற்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பேருந்து நிலையம் அமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், செயல் அலுவலர், பொறியாளர், வர்த்தகர் அமைப்பினர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment