சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் திருப்புவனம் பேரூராட்சி புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக சிறப்பு பேரூராட்சி கூட்டம் செயல் அலுவலர் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது.
இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உட்பட திமுக, காங்கிரஸ், தமாக மற்றும் பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு கூட்டத்தில் திருப்புவனம் பேரூராட்சியில் கடந்த 40 வருடங்களாக மக்கள் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையை இருந்து வந்த நிலையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்ற குறித்து கூட்டம் நடைபெற்றது, தீர்மானம் வாசிக்கும் போது தீர்மானத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பொழுது அதில் கட்டப்படும் கடைகள் சரி பாதி தம தேவஸ்தானத்திற்கும் விடப்படும் என்று வாசித்தார்கள் அப்போது குறிக்கிட்ட தாயக சகோதர கவுன்சிலர்கள் இருவரும் எதற்கு தேவஸ்தானத்திற்கு கடைகள் கொடுக்க வேண்டும் அரசு புறம்போக்கில் இருக்கும் இடத்திற்கு எதற்கு தேவஸ்தானத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கேட்கவே அதற்கு செயல் அலுவலர் தேவஸ்தானம் சார்பில் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு தீர்ப்பாகியுள்ளது என்று கூறியுள்ளார்கள், அப்பொழுது இது போலியாக தொடரப்பட்ட வழக்கு எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள், எல்லாத்திலும் அரசுக்கு சொந்தமான இடம் என்று இருக்கும்பொழுது எதற்கு தேவஸ்தானும் இடம் என்று கொடுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதம் ஏற்பட்டது,
இடையில் எழுந்து பேரூராட்சி துணை தலைவர் ரஹ்மத்துல்லா தீர்மானம் நிறைவேற்றும் பொழுது எதற்காக தேவையில்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் கேட்கவே வாக்குவாதம் முற்றியது, அப்பொழுது இந்த இரண்டு சகோதரர்களும் துணைத் தலைவரை பார்த்து நீ எழுந்து வெளியே வாடா என்ன தாவுர வெளிய வாடா பாத்துக்குவோம் அப்படின்னு அடிக்க சென்றனர் இடையில் நின்ற கவுன்சிலர்கள் அவரை விலக்கி விட்டனர் வாக்குவாதம் கடுமையாக இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது கவுன்சிலர் கூட்டம் கலவரக் கூட்டமாக மாறியது இதனை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இரண்டு சகோதர கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்
No comments:
Post a Comment