சிவகங்கையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டம் சார்பாக "மாவட்ட அளவிலான பயிலரங்கம்" சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கட்டிடத்தில் சனிக்கிழமை காலை மாவட்ட தலைவர் தோழர் அ. பாண்டி அவர்களின் தலைமையிலும், மாவட்டத் துணைத் தலைவர்கள் பாலசுப்பிரமணியன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் வரவேற்புரையை மாநில செயற்குழு உறுப்பினர் கலா ராணி அவர்களும், துவக்க உரையை மாவட்ட செயலாளர் லதா அவர்களும், மாநில செயலாளர் பி. பாண்டி அவர்கள் வாழ்த்துரையும் வழங்கினர்.
மேலும் இப்பயிலரங்கத்தில் 'தலைமை பண்புகள்' குறித்து மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களும், 'சத்துணவு திட்டத்தை பாதுகாப்போம்' என்ற மாநில செயலாளர் தலைப்பில் பாண்டிசெல்வி அவர்களும், 'சத்துணவு திட்டமும் ஆட்சியாளர்களின் செயல்பாடும்' என்ற தலைப்பில் மாநில செயலாளர் லதா ஆகியோர் பேருரையாற்றினர்.
இறுதியாக மாவட்ட பொருளாளர் கற்பகவள்ளி அவர்கள் நன்றியுரையாற்றி இப்பயிலரங்கத்தை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், சிவகங்கை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment