இளையான்குடியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடி கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய, நகர மற்றும் பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை, அரசின் நலத்திட்டங்களை இல்லந்தோறும் கொண்டு சேர்த்தல் மற்றும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னெடுக்க வேண்டிய ஆயத்த பணிகள் குறித்து மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் எடுத்துரைத்தார்
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மாநகரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார், மாவட்டக் கழக துணைச் செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுப. மதியரசன், பேரூர் கழகச் செயலாளர் நஜ்முதீன், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் செல்வராஜ், கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ்மாறன், மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர், வெங்கட்ராமன், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து சார்பு அணியினர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொது உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment