மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான கராத்தே போட்டியில் பரிசுகளை குவித்த மானாமதுரை கராத்தே பள்ளி மாணவர்கள்.
மதுரையில் தமிழ்நாடு அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் நாகர்ஜுன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியை மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்றுவர்களின் விவரங்கள் பின்வருமாறு, ஆர். ஹரிஹரன் கட்டா பிரிவில் மூன்றாம் பரிசு சண்டை பிரிவில் முதல் பரிசு. ஜே. நித்தின் கட்டா பிரிவில் முதல் பரிசு சண்டை பிரிவில் இரண்டாம் பரிசு வென்றார். அடுத்ததாக ஆர். யாஷ்வாந்த் கட்டா பிரிவில் மூன்றாம் பரிசு சண்டை பிரிவில் முதல் பரிசும், எம்.அஸ்வின் ராஜா கட்டா பிரிவில் முதல் பரிசு சண்டை பிரிவில் முதல் பரிசும் பெற்றனர்.
கூடுதலாக எஸ். ரித்திகா கட்டா பிரிவில் முதல் பரிசு சண்டை பிரிவில் முதல் பரிசு மற்றும் கே. ஹரிணி கட்டா பிரிவில் முதல் பரிசு சண்டை பிரிவில் முதல் பரிசும், மேலும் ஜே. சிவப்பிரகாஷ் கட்டா பிரிவில் முதல் பரிசு சண்டை பிரிவில் முதல் பரிசும், எம். கவின் கட்டா பிரிவில் முதல் பரிசு சண்டை பிரிவில் முதல் பரிசும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், கடந்த 150 ஆண்டு காலம் மருத்துவ சேவை வழங்கி வரும் தயாபுரம் டி.எல்.எம் மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றிவரும் திரு விஜய் பிரதாப் அவர்கள், திரு பவுல் கிஃப்ட்சன் ராஜா மற்றும் திரு ஜேக் தவச்செல்வன் ஆகியோர் நாகர்ஜுன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி நிறுவனர் கராத்தே மாஸ்டர் திரு சிவ. நாகர்ஜூன் அவர்களின் கடின உழைப்பை கௌரவித்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள்களை வழங்கி வெகுவாக பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment