திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் அல்லிநகரம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 7 August 2024

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் அல்லிநகரம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது


திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் அல்லிநகரம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் அல்லிநகரம் கிராமத்தில் "மக்களுடன் முதல்வர்" முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் கிராம பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, நலத்திட்டங்களை வழங்கினார். இம்முகாமில் பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் மற்றும் திருபுவனம் பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாஸ், மாவட்ட வளங்கள் அலுவலர் சபிதாள் பேகம், வட்டாட்சியர் விஜயகுமார், ஒன்றிய பெருந்தலைவர் தூதை. சின்னையா, ஒன்றிய துணை பெருந்தலைவர் அழ. மூர்த்தி, நகர் கழக செயலாளர் நாகூர்கனி, பேரூராட்சி துணைத் தலைவர் ரஹமத்துல்லாகான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், அருள்பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கங்குளம் ஈஸ்வரன், லாடனேந்தல் சுப்பையா, ஊராட்சி மன்ற தலைவர் இந்திராகாந்தி சூரபிரகாஷ், அல்லிநகரம் ஒன்றிய கவுன்சிலர் இந்திரா ஜெயராஜ், மாவட்ட விவசாய அணி சேகர், அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad