மானாமதுரையில் நடைபெற உள்ள இலவச மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு ஒர் அரிய வாய்ப்பு.
தமிழகத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சத்ய சாய் நிறுவனங்கள் சார்பாக மானாமதுரை ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மானாமதுரை ஆதனூர் சாலையில் உள்ள பாபா மழலையர் பள்ளியில் நடைபெற உள்ளது.
இம்மருத்துவ முகாமில் சர்க்கரை, இசிஜி, இரத்தம், கண் உள்ளிட்ட பரிசோதனைகள், தேவைப்படும் மற்ற மருத்துவ ஆலோசனைகள், பொதுவான நோய்களுக்கும் பரிசோதனை செய்து இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. எனவே மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இம்முகாமை பயன்படுத்தி பயனடைமாறு ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment