சிவகங்கை ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 'ஊழியர் சந்திப்பு இயக்கம்' நடைபெற்றது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக 'ஊழியர் சந்திப்பு இயக்கமானது' சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பாக மதியம் சுமார் 3 மணி அளவில் ஒன்றிய செயலாளர் தோழர் எஸ். பூப்பாண்டியம்மாள் அவர்களின் தலைமையிலும், ஒன்றிய துணைத் தலைவர் கலைச்செல்வி அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் சத்துணவு ஓய்வூதிய மாவட்ட நிதி காப்பாளர் எஸ். நடராஜன், சத்துணவு ஓய்வூதிய மாநிலத் துணைத் தலைவர் பி. பாண்டி, மாவட்ட செயலாளர் லதா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மேலும் இதில் கூறப்பட்டதாவது, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின்மூலம் பலகட்ட போராட்டங்களை நடத்தியதன் விளைவாக 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.700, ரூ.600, ரூ. 500 என்ற விகிதத்தின் அடிப்படையில் முதன்முதலாக ஓய்வூதியத்தை ஊழியர்கள் பெற்றனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், ஒட்டுமொத்த தொகை உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை போராட்டத்தின் மூலம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும் மாநில செயற்குழு முடிவின் அடிப்படையிலும் தமிழகம் முழுவதும் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று கோட்டை முற்றுகை போராட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மிகவும் எழுச்சியுடன் நடத்திய பொழுது சத்துணவு ஊழியர்களை தமிழக அரசு மாநில நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை 26 பேரை நிரந்தர பணி நீக்கம் செய்தது.
இருப்பினும் அன்றைய ஆட்சியாளர்களால் பணி நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் அதே ஆட்சியில் அதே இடத்தில் பணியமர்த்தப்பட்ட வரலாற்றை நினைவு கூறும் விதமாகவும், தோழர் எம்.ஆர். அப்பனின் நினைவு நாளை எழுச்சி நாளாக நினைவு படுத்துகின்ற வகையிலும், மாறி மாறி வந்த அரசாங்கத்திடம் நாம் நடத்திய போராட்டங்களின் மூலமாகவே எல்லா உரிமைகளையும் பெற்று இருக்கிறோம் என்பதை நினைவு கூறும் வகையிலும் இன்றைய ஆட்சியாளர்களிடம் சத்துணவு ஊழியர்கள் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை.
இருந்தாலும் தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை தேர்தல் கால வாக்குறுதிகளாக அறிவித்தாலும் மூன்று ஆண்டு முடிவடைந்த நிலையில் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் இன்று வரை நிறைவேறாத நிலையே உள்ளது என்றும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக தமிழக அரசிற்கு வலியுறுத்தி தெரிவித்துக் கொண்டனர்.
இறுதியாக மாவட்ட செயலாளர் தோழர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய பொருளாளர் எஸ். பிரபா ஆகியோர் நன்றியுரை ஆற்றினர். மேலும் இந்நிகழ்வில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment