மானாமதுரையில் திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 August 2024

மானாமதுரையில் திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.


மானாமதுரையில் திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய, நகர் மற்றும் பேரூர் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் மானாமதுரை எம்.எஸ்.பி.ஏ உண்ணாமலை திருமண மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள், உறுப்பினர் சேர்க்கை, அரசின் நலத்திட்டங்களை இல்லந்தோறும் கொண்டு சேர்த்தல் மற்றும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னெடுக்க வேண்டிய ஆயத்த பணிகள் குறித்து மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் எடுத்துரைத்தார்.


மேலும் இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார், மாவட்டக் கழக துணைச் செயலாளர் சேங்கைமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராமையா, நகர் கழகச் செயலாளர் பொன்னுச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை. ராஜாமணி, மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஏ.கடம்பசாமி, ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய துணை பெருந்தலைவர் முத்துச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தர்,  பொதுக்குழு உறுப்பினர் ஜெயமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து சார்பு அணியினர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொது உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad