மானாமதுரை புதிய பேருந்து நிலையத்திற்கு அன்பளிப்பாக சிசிடிவி கேமரா வழங்கிய மானாமதுரையை சேர்ந்த இன்ஜினியர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்து நிலைய நுழைவாயில் முன்பாக மானாமதுரை டி 1 காவல் நிலையம் மூலமாக ஃபியூச்சர் பைபர்ஸ் இன்ஜினியரிங் மற்றும் பிராஜெக்ட்ஸின் நிறுவனர் மற்றும் பொறியாளர் சந்திரமோகன் அவர்களின் சொந்த செலவில் அதிநவீன சிசிடிவி கேமரா அன்பளிப்பாக அளிக்கப்பட்டு பொருத்தப்பட்டது.
இதனை மானாமதுரை டிஎஸ்பி கண்ணன் அவர்கள் ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மானாமதுரை சார்பு ஆய்வாளர் பூபதி ராஜா, வழக்கறிஞர் சுரேஷ்பாபு, காவல்துறையினர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment