மானாமதுரையை அடுத்த முத்தநேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய வட்டார பொதுசுகாதார ஆய்வகம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் முத்தநேந்தலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வட்டார பொதுசுகாதார ஆய்வக கட்டிடத்தினை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பொதுமக்களுக்கு கூடுதலாக தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்தும், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் துரை ராஜாமணி, ஒன்றிய துணை பெருந்தலைவர் முத்துச்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர், வழக்கறிஞர் கதிரவன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வளர்மதி, முத்தநேந்தல் கிளைக் கழக நிர்வாகிகள், மருத்துவ பணியாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment