மாரநாடு கிராமத்தில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தில் குத்து விளக்கேற்றிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் மாரநாடு கிராமத்தில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தினை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் நேரில் சென்று குத்து விளக்கேற்றி, பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் மக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தோம்.
இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் கடம்பசாமி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வளர்மதி, வட்டார மருத்துவ அலுவலர் சுகுணா, திமுக கட்சி நிர்வாகிகள் மாரநாடு சந்திரசேகர், சுப்ரமணியன், மருத்துவ பணியாளர்கள், திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment