மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் அச்சகம் மற்றும் பிளக்ஸ் போர்டு உரிமையாளர்களுக்கு புதிய நிபந்தனைகளை வழங்கிய டிஎஸ்பி - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 August 2024

மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் அச்சகம் மற்றும் பிளக்ஸ் போர்டு உரிமையாளர்களுக்கு புதிய நிபந்தனைகளை வழங்கிய டிஎஸ்பி

 


மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் அச்சகம் மற்றும் பிளக்ஸ் போர்டு உரிமையாளர்களுக்கு புதிய நிபந்தனைகளை வழங்கிய டிஎஸ்பி.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை காலை சுமார் 11 மணி அளவில் மானாமதுரை உட்கோட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அச்சகம் மற்றும் பிளக்ஸ் போர்டு உரிமையாளர்களை நேரில் சந்தித்து வருகிற 07.09.2024, 11.09.2024, 27.10.2024 மற்றும் 30.10.2024 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி, இமானுவேல் சேகரன் நினைவு நாள், மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை சம்மந்தமாக  மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் திரு நிரேஷ் அவர்களின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி, இமானுவேல்சேகரன் நினைவு நாள், மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை உள்ளிட்ட விழாக்களுக்கு அச்சிடப்படும் சுவர் ஒட்டிகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் எவ்வாறு அச்சிடப்பட வேண்டும் என்பதற்கான நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டுமென்று கூட்டத்தில் கலந்து கொண்டோருக்கு அறிவுறுத்தப்பட்டது.


இதில் அறிவுறுத்தப்பட்ட நிபந்தனைகள் பின்வருமாறு, 


1. விநாயகர் சதுர்த்தி, இமானுவேல்சேகரன் நினைவு நாள், மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை ஆகிய நிகழ்ச்சிகளை முன்னிட்டு ஜாதி மற்றும் மதத்தலைவர்கள் படங்கள் புண்படுத்தும்படியான வாசகங்கள் பிளக்ஸ் போர்டுகள் அச்சிடக்கூடாது. 


2. ஜாதி மற்றும் மதத்தலைவர்கள் படங்கள் எதுவும் காவல்துறையின் முன் அனுமதியில்லாமல் அச்சிடக்கூடாது. 


3. மற்ற எந்த ஜாதியினரையோ, மதத்தினரையோ புண்படுத்தும்படியான வாசகங்கள் அச்சிடக்கூடாது. 


4. தனிப்பட்ட நபர்கள் / அரசியல் கட்சி தலைவர்கள் / அரசு அதிகாரிகள் / மதத் தலைவர்கள் ஆகியோரை தாக்கியோ மனம் புண்படும்படியான, ஆட்சேபகரமான வாசகங்கள் அச்சிடக்கூடாது. 


5. ஜாதி மற்றும் மதத்தலைவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகள் / பேனர்கள் காவல்துறையின் முன் அனுமதி யில்லாமல் அச்சிடக்கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்களையும் முன் அனுமதியில்லாமல் விளம்பரப்படுத்த கூடாது. 


6.இந்திய இறையான்மையை பாதிக்கும் வண்ணம் அச்சிடக்கூடாது. மேலும் காவல்துறை அனுமதிபெற்றே ஜாதி, மதம் சம்மந்தமாக எந்தவொரு விளம்பர போர்டுகளும் தயார் செய்யவேண்டும்.


7. குருபூஜை சம்பந்தமான பிளக்ஸ் பேனர் அச்சிட யார் வந்து கொடுத்தாலும் உடனடியாக காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். 8. அச்சகத்தில் பதிவு செய்யப்பட்ட பிளக்ஸ் பேனர்களின் அடியில் அச்சகத்தின் பெயர் மற்றும் போன் நம்பர் தெளிவாக தெரியும்படி அச்சிட வேண்டும். 9. சட்டத்திற்கு புறம்பாக சுவர் ஒட்டிகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் தயாரிக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். 


இவ்வாறு மேல் குறிப்பிட்ட நிபந்தனைகளை அச்சகம் மற்றும் பிளக்ஸ் போர்டு உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்று காவல்துறையின் சார்பாக வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மானாமதுரை சேர்ந்த அச்சகம் மற்றும் உரிமையாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad