மானாமதுரை பாபா பள்ளியில் தேசிய விளையாட்டு போட்டிகள் தினத்தை முன்னிட்டு புதிய விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 August 2024

மானாமதுரை பாபா பள்ளியில் தேசிய விளையாட்டு போட்டிகள் தினத்தை முன்னிட்டு புதிய விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டது.

 


மானாமதுரை பாபா பள்ளியில் தேசிய விளையாட்டு போட்டிகள் தினத்தை முன்னிட்டு புதிய விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த மிளகனூர் சாலையில் அமைந்துள்ள பாபா மெட்ரிக் பள்ளி பாபா கார்டனில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இறகு பந்து மற்றும் கையுந்து பந்து விளையாட்டிற்கு அமைக்கப்பட்ட புதிய மைதானங்கள் திறக்கப்பட்டது. இவ்விழாவில் மாணவர்களுக்கிடையே கோ - கோ, கபடி, சிலம்பம், வில்வித்தை போன்ற தேசிய விளையாட்டுகளின் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 


இவ்விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் அம்மா இராஜேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் மற்றும் பள்ளியின் ஆட்சியர் திருமதி ஆர். மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி ஆர்.சாரதா மேற்கொண்டார். துணை முதல்வர் திரு யா. ஆப்ரகாம் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad