காரைக்குடியில் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் திமுக கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரிய கருப்பன் அவர்கள் மானமிகு முன்னாள் அமைச்சர் மு தென்னவன் அவர்களின் ஆலோசனையின் படி முன்னாள் தமிழக முதல்வர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் மாண்புமிகு மேயர் சே. முத்துத்துரை அவர்களின் தலைமையில் துணை மேயர் அண்ணன் நா. குணசேகரன் அவர்கள் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் மு தென்னவன் அவர்கள் இல்லத்தில் முன்பாக கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள் அதனைத் தொடர்ந்து வார்டுகளில் கொடி கம்பம் அருகில் வைக்கப்பட்ட கலைஞரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள் அதுசமயம் மாநகர கழக நிர்வாகிகள் மற்றும் வட்ட கழக உடன்பிறப்புகளும் மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்.
No comments:
Post a Comment