மேலப்பசலை ஊராட்சிக்குட்பட்ட அரிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி கிராம பொதுமக்கள் மனு - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 15 August 2024

மேலப்பசலை ஊராட்சிக்குட்பட்ட அரிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி கிராம பொதுமக்கள் மனு


மேலப்பசலை ஊராட்சிக்குட்பட்ட அரிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி கிராம பொதுமக்கள் மனு.


சிவகங்கை மாவட்டம் மேலப்பசலை ஊராட்சிக்குட்பட்ட அரிமண்டபத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் பாலமுருகன் மனைவி ஸ்ரீதேவி மேலப்பசலை ஊராட்சிமன்ற தலைவர் அவர்களுக்கு கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகளின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், கிராம பொதுமக்கள் சார்பாக கிராமசபை கூட்டத்தின் வாயிலாக கிராம பொதுமக்களின் நலன் கருதி அடிப்படை வசதிகள் வேண்டி மனு அளித்தார். 

அம்மனுவில் கோரப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு,  கம்யூனிஸ்ட் சங்கத்திலிருந்து சின்ன வீரன் வீடு வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைத்துதரவும், அனைத்து குடிநீர் குழாய்களிலும் திருகு பைப் அமைத்து தரவும், கருவேல் மரங்களை அகற்றி தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், தெரு விளக்குகளை முறையாக சரி செய்து விடவும், அங்கன்வாடி மையத்திற்கு அருகில் இருக்கும் சேதம் அடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறைக்கு தேவையான தண்ணீர் குழாய் அமைத்துதரவும், அனைத்து தருவிருக்கும் சாலை வசதி அமைத்து தரவும், மேல பேசுற ஊராட்சிக்குட்பட்ட சேதுராயநேந்தல் கிராமத்திற்கு குடிநீர் வசதி மின்சார வசதி செய்துதரவும், ரயில்வே மேம்பாலத்திற்கு அருகிலிருக்கும் இடத்தில் அதாவது செல்வராஜ் வீட்டில் இருந்து சிமெண்ட் களம் வரை மழைக்காலத்தில் செல்வதற்கு சாலை அமைத்துதரவும் மற்றும் குளிக்கும் ஊரணிக்கு மின்விளக்கு அமைத்துதர என மிக நீண்ட அடுக்கடுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை கிராம பொதுமக்கள் கையெழுத்திட்டு மிகத்தாழ்மையுடன் வலியுறுத்தி முன்வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad