மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா கல்வி நிறுவனங்களில் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டு மாணவர்கள், பெற்றோர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ச்சியாக பள்ளி தாளாளர் ஆர். கபிலன் அவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆகஸ்ட் 14 அன்று தேசிய பிரிவினை கொடூரங்களின் நினைவு தினத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனர் அம்மா பி. ராஜேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார், பள்ளி தாளாளர் ஆர்.கபிலன், பள்ளி நிர்வாகி ஆர். மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை பள்ளியின் முதல்வர் எம். சாரதா மற்றும் பொறுப்பாசிரியை எம். பாண்டியம்மாள் மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment