சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் அக்னிவீர் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 August 2024

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் அக்னிவீர் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

  


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் அக்னிவீர் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 


திருச்சியில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் சார்பாக அக்னிவீர் திட்டத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்னிவீர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் துரை வரவேற்புரை நிகழ்த்தி மாணவர்களுக்கு ராணுவத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் நாயக் சுபேதார் சவுத்ரி அக்னி வீர் சேர்க்கை தொடர்பாகவும், அக்னிவீர் திட்டத்தின் பலன்கள் மற்றும் பணிவாய்ப்பு குறித்தும் எடுத்துரைத்தார். கல்லூரியின் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தார். இந்நிகழ்ச்சியில் ஹவில்தார் டிஹோல் மனோஜ் மற்றும் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad