தேர்தல் வெற்றியை தொடர்ந்து கோவில் வேண்டுதலை நிறைவேற்றிய பாராளுமன்ற உறுப்பினர்.
நடந்து முடிந்த சிவகங்கை மக்களவைத் தேர்தலில் மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் அவர்கள் 205664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தனது வெற்றியை தொடர்ந்து கோவில் வேண்டுதை நிறைவேற்றும் விதமாக சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை அடுத்த மாரநாடு கருப்பர் கோவிலுக்கு சுமார் 250 கிலோ எடையுள்ள சுமார் 20.5 அடி நீளம் கொண்ட அரிவாளை காணிக்கையாக வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி, மாநில மகளிரணி துணை தலைவி ஸ்ரீவித்யா கணபதி, மாவட்ட, வட்டார, நகர, பேரூர் மற்றும் உள்ளாட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment