திருப்புவனத்தில் திமுகவின் பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புவனம் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் மற்றும் பேரூரை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் திருப்புவனத்தில் உள்ள டி. ஆர். மஹாலில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், சிவகங்கை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள், உறுப்பினர் சேர்க்கை, அரசின் நலத்திட்டங்களை இல்லந்தோறும் கொண்டு சேர்த்தல், வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னெடுக்க வேண்டிய ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்டக் கழக துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.ஏ. கடம்பசாமி, திருப்புவனம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வசந்தி சேங்கை மாறன், திருப்புவனம் பேரூர் கழக செயலாளர் நாகூர்கனி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், அனைத்து சார்பு அணியினர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், பொது உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment