சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் லெட்சுமிபுரம் கிராமத்தில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் 25 கிலோவாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் இயக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இளையான்குடி ஒன்றியம் மெய்யனேந்தல் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடைபெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் கலைஞரின் கனவு இல்லத்திற்கான ஆணைகளையும் திட்ட பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்டாட்சியர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார்,விஜயகுமார்,
இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப. மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜ்முதீன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப.தமிழரசன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, இளைஞர் அணி பைரோஸ்கான், மாவட்ட பிரதிநிதி கருண
No comments:
Post a Comment