கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மாநில இளைஞர் அணி சார்பாக பேச்சு போட்டி, அமைச்சர் பங்கேற்பு.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி சார்பாக பேச்சுப் போட்டி சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திரு கே. ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் இலக்கிய தென்றல் திரு மு.தென்னவன் மற்றும் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பேச்சு போட்டியின் நடுவர்களாக கம்பம் செல்வேந்திரன், போடி காமராஜ், சேலம் சுஜாதா, உமா ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் இந்நிகழ்வில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் ஜி. பி. ராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கார்த்தி, பரணிகிட்டு, மதிவண்ணன், மகதீர், பொற்கோ சேதுபதிராஜா, இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, மாநில ஊடகவியலாளர் மகிழன், மாவட்ட பொருளாளர் துரைராஜ், எழுத்தாளர் சேவியர், பொதுக்குழு உறுப்பினர் ரவி, பேச்சுப் போட்டி பங்கேற்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment