காரைக்குடியில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்ட கழகம் சார்பாக நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டமானது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள டாக்டர் கலைஞர் பவள விழா மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை தாங்கிய மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர் அவர்கள் கழகப் பணி குறித்தும், கழக வளர்ச்சி குறித்தும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் வருகை குறித்தும் எடுத்து கூறினார்.
இந்நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்ட கழக துணை செயலாளர் சேங்கைமாறன், மாவட்ட கழக துணை செயலாளர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டத்தின் அனைத்து சார்பு அணியினர், மாவட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment