மானாமதுரையில் கபடி போட்டியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர், வீரர்கள் உற்சாக வரவேற்பு.
கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியை சிறப்பு விருந்தினராக மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் தலைமை தாங்கி கலந்து கொண்டு கபடி வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து போட்டியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, திமுக இளைஞர் அணியை சேர்ந்த வேங்கை சுந்தர், கபடி விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment