காரைக்குடியில் காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் . மாவட்ட தலைவர் அருளானந்து. தலைமையில் காரைக்குடியில் அமைந்துள்ள மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பூவை சம்பத், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சுரேஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜன் இளைஞரணி நிர்வாகிகள் முத்துக்குமார் நாகராஜன், என்,ஜி,ஒ..காலனி பகுதி செயலாளர் கணேசன் பாபு, காரைக்குடி நிர்வாகிகள் ஆனந்த் நடராஜன்,காரைக்குடி தொகுதி துணை தலைவர் முத்துகுமார், தென்மண்டல இளைஞரணி துணைசெயலாளர் அலெக்ஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.,
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன;
1.கேரள மாநிலத்தில் வயநாடு மற்றும் பல மாவட்டங்களில் இயற்கை பேரிடர்களால் மரணம் அடைந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியும்.
2.காரைக்குடி பெரிய கண்மாய் தூர்வார வேண்டும் சம்பை ஊற்றுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் தமிழ்நாடு கெமிக்கலுக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
3.ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்க வேண்டும் என முன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment